சென்னை, ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமான பணி தொடங்கியது. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை தடுக்காமல் நினைவிட கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சமாதிக்கு நேர் பின்புறத்தில் ஜெயலலிதா சமாதி அமைந்துள்ளது. அந்த சமாதி இடத்துக்கு நேற்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.ஜெயலலிதா சமாதி இடத்தில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நினைவிட வளாகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறை வசம் உள்ளது.
எனவே ஜெயலலிதா நினைவிடத்தை கட்டும் பொறுப்பு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுப் பணித்துறையைச் சேர்ந்த கட்டிடக் கலை வல்லுனர்கள், வடிவமைப்பாளர்கள் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு பல தடவை வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கான மாதிரி படங்களை வரைந்து கொடுப்பார்கள். அதில் ஒரு கட்டிட அமைப்பு தேர்வு செய்யப்படும். பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும். இதற்கிடையே ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறு சமாதி கட்டும் பணி நேற்று தொடங்கியது.
இதற்காக நிறைய கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரானைட் கற்களை சிறு, சிறு துண்டுகளாக அறுத்து எடுக்கும் பணியில் 6 வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கிரானைட் கற்கள் மூலம் ஜெயலலிதா சமாதி இடம் அழகுப்படுத்தப்படும். அதை சுற்றி நினைவிடம் அமைக்கப்படும்.இதற்கிடையே ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ஜெயலலிதா சமாதியைப் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை தடுக்காமல் நினைவிட கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
English Summary:
Chennai, Jayalalithaa has started construction work on the memorial. Memorial to prevent people from coming to pay homage to her officials plan to continue construction work.