மும்பை - விவசாயிகள் பயிர்க்கடன்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், வங்கிக் கணக்குகளிலிருந்தும், ஏ.டி.எம்-களிலும் பணத்தை எடுக்கவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லாததால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால், விவசாயிகள் தங்கள் பயிர்க்கடனை செலுத்த முடியாமல், மிகவும் அவதியடைந்தனர்.
3 சதவிகிதம் ஊக்கத்தொகை:
இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்கள் பயிர்க்கடன்களை செலுத்த இம்மாதம் 31-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம், மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நீடிக்கப்பட்ட காலத்திற்குள் விவசாயிகள் தங்கள் பயிர்க்கடன்களை செலுத்தினால், கடன் தொகையில் 3 சதவிகிதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Mumbai - Crop farmers more time to pay the Reserve Bank has declared a 60-day extension. 500 and 1000 banknotes, the central government announced on 8th of last month's void. Subsequently, the old banknotes to be deposited in banks, bank accounts, ATM's and imposed several conditions to make money.