பயிர்க் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற அ.தி.மு.க. வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
விவசாயிகள் தவிப்பு :
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தை கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும், இதற்கான கால அவகாசம் இம்மாதம் 5-ம் தேதியிலிருந்து நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொ ண்டார் . இதனை மத்திய வேளாண்துறை அமைச்சர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
விஜிலா சத்யானந்த்:
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இதேபோன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பங்குகளை மத்திய அரசு விற்றபோது, அந்தப் பங்குகளை தமிழக அரசு நிறுவனங்கள் மூலம் வாங்கி, தொழிலாளிகளை காப்பாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என பெருமிதம் தெரிவித்தார்.
English Summary : Crop insurance premium pay for time extension: The Central Government approval: Digg Request Approval.Crop insurance premium to pay for an extension of time for Digg Has acceded to the request of the Federal Government. Farmers groaning: Speaking in the Rajya Sabha yesterday Digg Members Navaneetha Krishnan, farmers suffering crop insurance premiums were not able to build, which should be extended for a period of time from the date of the 5th of this month ntar request. The Union Agriculture Minister, immediately accepted.