சென்னை: 9 நாட்கள் சிகிச்சை முடிந்து தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 15 ம் தேதி இரவில் கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று மற்றும் சளித்தொல்லை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி:
டிரக்யோஸ்டமி என்ற கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலம் பெற்றுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொண்டர்கள் மகிழச்சி :
இவர் இன்று இல்லம் திரும்புவது அறிந்து திமுக தொண்டர்கள் பலர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்திருந்தனர். கருணாநிதிக்கு கை காட்டி தங்களின் ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். வழக்கமாக அவர் செல்லும் காரில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியி்ல இருந்து கிளம்பும்போது கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, கருணாநிதி மகள் செல்வி, கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் வேலு, பொன்முடி, மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் வந்திருந்தனர். மாலை 4.50 மணி அளவில் கோபாலபுரம் வீடு சென்றடைந்தார்.
நலம் விசாரித்த தலைவர்கள்
கருணாநிதியை காங்., துணை தலைவர் ராகுல், அதிமுக தரப்பில் தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.,தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மற்றும் பா.ஜ.,இடதுசாரி தலைவர்கள் நடிகர்கள் என பலரும் ஆஸ்பத்திரி சென்று ஏற்கனவே நலம் விசாரித்தனர்.
English summary:
Chennai: 9 days after the treatment, DMK President M Karunanidhi was discharged today. On the night of the 15th and cold problem Karunanidhi had lung infection. Followed by suffocation occurred in Chennai Kaveri hospital.