சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் முன்னிலையில், மத்திய குழுவை தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க அனுமதிக்க மறுப்பட்டது.
‛வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய, மத்திய குழு வந்துள்ளது. இன்று காலை, தலைமை செயலகத்தில், முதல்வர்ஓ .பன்னீர்செல்வத்துடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது. அப்போது மூன்று மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மத்திய குழுவை சந்திக்க முயன்றனர். ஆனால், முதல்வர் முன்னிலையில் மத்திய குழுவை சந்திக்க தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்ரமணியன் கூறியதாவது; மூன்று மாவட்டங்களில், 22 தொகுதிகள் உள்ளன. இதில், 13 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மத்திய குழுவை சந்திக்க முயன்றோம். ஆனால், முதல்வர் முன்னிலையில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. வேறு ஒரு கூட்டத்தில் தான், மத்திய குழுவை சந்தித்து மனு கொடுத்தோம். மூன்று மாவட்டங்களில், ஒரு லட்சம் மரங்கள் விழுந்துள்ளன.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், நூற்றுக்கணக்கான மின் மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து, மத்திய குழுவிடம் மனுவாக கொடுத்துள்ளோம்.இவ்வாறு மா.சுப்ரமணியன் கூறினார்.
English Summary:
Chennai: Chennai head office, in the presence of chief minister, DMK central committee - MLAs meet not allowed.