சென்னை: ‛வர்தா' புயல் வீசியதால், மூன்று மாவட்டங்களில், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சென்னை, எழிலகத்தில் இன்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
‛வர்தா' புயல் வீசிய போது, மூன்று மாவட்டங்களில், 24 பேர் உயிர் இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில், 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டன. புயலினால், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 5,500 ஹெக்டேர் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 529 மாடுகள், 299 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. 70 ஆயிரம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary:
Chennai: "varta" storm, the three districts, 28 thousand hectares of crops suffered damage. Chennai, Uthayakumar today the revenue minister, said: