புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னராக முன்னாள் மத்திய உள்துறை செயலர் அனில் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லி கவர்னர் நியமனம்:
டில்லி துணை நிலை கவர்னராக இருந்த நஜீத் ஜங் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய கவர்னரை நியமிப்பதற்காக நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டது. உள்துறை அமைச்சகத்தின் செயலராக இருந்த, ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் பைஜலை, 70 டில்லி கவர்னராக நியமிக்க பிரதமர் அலுவலகம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. பைஜல் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கினார். இவர் டிச., 30ம் பதவி ஏற்கிறார்.
யார் இந்த பைஜல்?
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் பைஜல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலராக பணிபுரிந்தவர். இவர், 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த போது உள்துறையிலிருந்து ஊரக வளர்ச்சிக்கு துறைக்கு மாற்றப்பட்டார்.
டில்லி மேம்பாட்டு துறையின் துணை தலைவராக பதிவி வகித்துள்ளார். ஜவஹர் லால் நேரு தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ. 60, 000 கோடி மதிப்பிலான திட்ட வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர்.பைஜல் 2006 ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
English Summary:
Delhi Lt. Governor appointed former Union Home Secretary Anil paijal.