போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 30ம் தேதி பலத்த பாதுகாப்புள்ள மத்திய சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர். அப்போது சிறை காவலர் ராமசங்கர் யாதவ் என்பவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்நிலையில் ஏட்டு ராமசங்கர் யாதவின் மகள் சோனியா திருமணம் நேற்று முன்தினம் போபாலில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சோனியாவின் தந்தை ஸ்தானத்தில் இருந்து விழாவுக்கு வந்தவர்களை நுழைவு வாயிலில் நின்று வரவேற்று உபசரித்தார். அப்போது சோனியாவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையையும் அவர் வழங்கினார்.
விழாவில் முதல்வர் சவுகான் பேசுகையில், ‘‘பணியின்போது இறக்கும் போலீசாரின் வாரிசுகளுக்கு அரசு தற்போது வேலை வழங்கி வருகிறது. இனி போலீசார் இறந்தால் அவர்களது மகள்களின் திருமணத்திற்கு ஆகும் செலவையும் மாநில அரசே ஏற்கும். மேலும் இறக்கும் போலீசாரின் மகள்களை அரசின் மகள்களாக பாவித்து அவர்களது திருமண ஏற்பாடுகளை அரசே செய்யும். சோனியாவும் அரசின் மகள்தான்’’ என்றார்.
English Summary:
Bhopal: Bhopal, Madhya Pradesh in the last 30 on a high-security federal prison escape by jumping from the Simi militants were 8 people climb the wall. The prison guard was killed by militants ramacankar Yadav. The book ramacankar Sonia Yadav's daughter got married yesterday in Bhopal. Chief Minister Shivraj Singh Chouhan, who participated in the ceremony, Sonia's father was in the room and stood at the entrance to the festival and entertained by adults. Sonia gave him the oath of Employment for the Government's work.