புதுடில்லி : மத்திய அரசு விரைவில் 'டிஜிட்டல்' கிராம திட்டத்தை மத்திய அரசு துவக்க இருக்கிறது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
‛டிஜிட்டல்' கிராமங்கள் :
டில்லியில் நடைபெற்ற ‛டிஜிட்டல்' இந்தியா திட்ட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: அனைத்து நவீன வசதிகளும் உடைய, 100 டிஜிட்டல் கிராமங்கள் குறித்த அறிவிப்பு விரைவில்வெளியாகும். இந்த கிராமங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுடன் உலக தரத்தில், 'வைபை' வசதி வழங்கப்படும்; தகவல் தொழில்நுட்ப தொடர்பு முழுமையாக ஏற்படுத்தப்படும்; இவை, நாட்டின் முன் மாதிரி கிராமங்களாக திகழும்.
சிறப்பு பயிற்சி :
இந்தியாவை ‛டிஜிட்டல்' மயமாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இன்டர்நெட் வழியாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 நாள்களில் 18 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 2017, மார்ச் மாதத்துக்குள் 1.25 கோடி பேருக்கு பயற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
NEW DELHI : The Central Government as soon as possible 'digital' Village project, the Federal Government is set to begin. With the help of modern technology in the rural areas, health and education, including the Union Minister Ravi Shankar Prasad said provided services.