வாஷிங்டன் : அமெரிக்க புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்டு டிரம்ப், தன்னுடைய தொழில் தொடர்புடைய நடவடிக்கைள் அனைத்தையும் கைவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் பதவியேற்கவிருக்கும் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் கவனம் செலுத்தும் பொருட்டு தொழில் தொடர்புடைய நடவடிக்கைள் அனைத்தையும் கைவிடப்போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
‘நான் எனது சிறந்த தொழில் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விடுபட போகிறேன். இனி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிபர் பதவியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்’. மேலும் வரும் டிசம்பர் 15-ம் தேதி தனது முடிவினை விவரமாக செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தன்னுடைய தொழில் தொடர்பை விட மறுப்பதாக டிரம்ப் மீது சட்டநிபுணர்கள் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary : Donald Trumps announcement to leave professional activities.The US has elected a new President Donald Trump, his employers said he would abandon all relevant measures.
Elected US President, Donald Trump will assume the presidency in January, in order to focus on industry-related measures will renounce everything. In this regard, posting on his Twitter page