திருச்சி: போதிய மழை பெய்யாததால் வறட்சியால் தமிழகத்திற்கு போறாத காலம் துவங்கி விட்டது என்று நேற்றைய தினமலர் இணையதளத்தில் முதல் பக்க செய்தி வெளியானது. தினமலர் சொன்னது போல் இன்று 30 ம் தேதி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் எலிக்கறி தின்ற நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் காவிரி மற்றும் டெல்டா மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் விவசாயம் பாதித்தது. இதனால் விரக்தி அடைந்து விவசாயிகள் தமிழகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்டோர் மனம் நொந்து இறந்தனர். சிலர் தற்கொலையும் செய்தனர் . இதனால் விவசாய குடும்பம் கடுமையாக பாதித்துள்ளது.
எலியை கடித்து தின்று.,
இதனால் தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து , இறந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் மாவட்டத்தை முற்றுகையிட்டு எலிக்கறி சாப்பிடும் போராட்டத்தை நடத்தினர். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாசலில் அமர்ந்து எலியை கடித்து தின்று போராட்டம் நடத்தினர். இது தவிர சட்டியில் எலிக்கறி வைத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை மக்கள் வினோதமாக பார்த்தனர்.
திருச்சியில் காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கலெக்டர் வராததால் விவசாயிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர் . வறட்சியின் பாதிப்பு இன்னும் போக, போக அதிகரிக்கும் என்றனர்.
English summary:
Tiruchirapalli: Tamil Nadu enough insufficient rainfall Since the drought that has been front-page news was published yesterday on the website of Dina. As said Dina rat flesh ate today on the 30th and particularly the Association of farmers protested in Trichy.