கோவை: கோவை மாநகரில் இருந்து தினசரி 850 டன் முதல் 900 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மாநகராட்சி குப்பை லாரிகளின் டீசல் செலவை குறைக்க, லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், கி.மீ கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. நிரம்பி வழியும் குப்பை தொட்டியை அடையாளம் கண்டு, அங்கு மட்டும் மாநகராட்சி குப்பை லாரிகளை இயக்கும் வகையில் குப்பை தொட்டியில் சென்சார் கருவி சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளது. லாரிகளுக்கு டீசல் விரயத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’மாநகரில் ஐந்து குப்பை தொட்டிகளில் சோதனை அடிப்படையில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. குப்பைத்தொட்டி நிரம்பினால், இந்த சென்சார் கருவி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஸ்கேன் செய்து, அந்த வார்டுக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர், அந்த இடத்திற்கு குப்பை லாரி அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் வெற்றியடைந்தால் மாநகர் முழுவதும் உள்ள குப்பை தொட்டிகளில் சென்சார் கருவி பொருத்தப்படும்’’ என்றனர்.
English summary:
Coimbatore City from 850 tons to 900 tons of garbage collected daily vellalur dumped in the garbage dump. Diesel costs of municipal garbage trucks, trucks equipped with GPS, the Corporation has taken steps, including monitoring km.