வாஷிங்டன்: இந்திய அரசின், இ-டூரிஸ்ட் விசா வழங்கும் இணைய தளத்தை போலவே, அதே வடிவிலான போலி இணைய தளங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் விண்ணப்பதாரர்களை எச்சரித்துள்ளது.
போலிகள்:
இது குறித்து, இந்திய தூதரகம், டிசம்பர் 27 ம் தேதியிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
இ-டூரிஸ்ட் விசா சேவை இணையதளம் என்ற பெயரில், இந்திய அரசின் இணையதளம் போலவே பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த இணையதளங்கள், விண்ணப்பதாரர்களை பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றன என்றும் புகார் கூறப்படுகிறது.
e-touristvisaindia.com; indianvisaonline.org.in; e-visaindia.com; indiavisa.org.in போன்ற இணையதளங்கள், இந்திய அரசின் இ-டூரிஸ்ட் விசா இணையதளங்கள் போலவே போலியாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள், indianvisaonline.gov.in என்ற அரசின் சரியான இணையதளம் மூலம் இ- டூரிஸ்ட் விசா சேவைகளை பெற வேண்டும் என்றும், இது சம்பந்தமாக வேறு எந்த இணையதளத்தையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இ-டூரிஸ்ட் விசா தவிர மற்ற வழக்கமான விசா தேவைகளுக்கு, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் www.ckgs.us என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Washington: The Indian government, e-Tourist visa, like the website, as well as fake Web sites in the form of operating and that they should be cautious about the people, the Indian Embassy in Washington has warned candidates.