சென்னை:‛ இன்று மாலை முதல், 36 மணி நேரத்திற்கு, ‛வர்தா' புயலால் கனமழை உண்டு' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛வர்தா' புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: டிச.,11ம் தேதி (இன்று) முதல், அடுத்த 36 மணி நேரத்திறகு தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், வடக்கு தமிழக கடலோர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும்.
இந்த மழை மெல்ல மெல்ல அதிகரித்து, 7 முதல், 19 செ.மீ., வரை மிக கனமழை முதல் அதி கனமழை வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பெய்ய கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உஷாராக:
சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறுகையில், இந்தியா வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, 25 செ.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயலுக்கான அறிகுறி தென்படுவதால், மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.
English Summary:
Chennai: "Today evening, 36 hours," varta "has a heavy storm," the Indian Meteorological Center said. "Varta" Storm of the Indian Meteorological Center said in a statement Dec., 11 th (today) first, in the next 36 hours southern coastal areas of Andhra Pradesh, north coastal areas of Tamil Nadu and Puducherry, in most cases, very heavy rain from May until fall. The rain gradually increased, from 7 to 19 cm, ranging from very heavy to very heavy rains in Chennai, Tiruvallur, Kancheepuram districts of Andhra Pradesh's Nellore and Prakasam districts may fall in a few places. He said in a statement.