புதுடெல்லி - மத்திய அரசின் பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 16 கட்சிகள் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது பண மதிப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து மத்திய அரசை எதிர்த்தன. இதனால் நாடாளு மன்றம் முடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் உட்பட 16 கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லி யில் இன்று நடைபெறுகிறது.
சோனியா தலைமை :
இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமை தாங்குகிறார். இதில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு கட்சி களின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லி புறப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தனிப் பட்ட முறையில் சந்தித்துப் பேசு வார் என்றும் தெரிகிறது.
English Summary:
New Delhi - 500 per federal old, eradication measures in relation to 1000 banknotes of 16 parties led by Congress President Sonia Gandhi in Delhi today to hold a major consultation.