பாரீஸ் : பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதுவதால், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
நெருக்கடி நிலை :
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இதுவரை அமலில் இருந்து வந்த நெருக்கடி நிலையை 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி வரை, மேலும் 7 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
பயங்கரவாத அச்சுறுத்தல் :
இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதுகியது. இதனாலேயே நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
English summary:
PARIS: French Government considers that there are threats of terrorist attacks, has decided to extend the state of emergency, and 7 months.