தர்மசாலா: ஏழை மக்களிடம் பணம் எடுக்கப்பட்டு பணக்காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பாதிப்பு:
அரியானா மாநிலம் தர்மசாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: ம.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில், பா.ஜ., அரசு ஆதிவாசிகளின் நிலங்களை பறித்து கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரானது. இதனால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாத்துறை, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதிவாசி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களின் பணம் பறிக்கப்பட்டு பணக்காரர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை இரண்டு பிரிவாக பிரதமர் பிரித்துள்ளார். ஒரு பகுதியில் ஒரு சதவீத பணக்காரர்களும், மற்றொரு பகுதியில் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் உள்ளனர்.
லட்டு:
இந்தியாவில் 6 சதவீத கறுப்பு பணம் தான் உள்ளது. மற்ற 94 சதவீத கறுப்பு பணம் ரியல் எஸ்டேட், நகை வடிவிலும், சுவிஸ் வங்கியிலும் தான் உள்ளது. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பார்லிமென்டில் பிரதமர் ஏன் சமர்ப்பிக்கவில்லை ? வங்கியில் வரிசையில் நிற்கும் ஏழை மக்களுக்கு ரூ.3 மதிப்புள்ள லட்டு கொடுத்த பா.ஜ.,வினர், விஜய் மல்லையாவுக்கு ரூ.1200கோடி மதிப்புள்ள 'லட்டு' கொடுத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
Dharamshala : by taking money from the poor to the rich, said Rahul had been given.