சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது எப்படியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி மொழி அளித்ததை அவர் வெளியிட்டு
ள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ஜல்லிக்கட்டை நடத்த அவரச சட்டம் பிறப்பிக்காமல் வெறும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டதால், உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தது என்று அவர் கூறியுள்ளார். அவசரச்சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த திமுக தலைவர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்காததால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
எனவே வரும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் ஜனவரி 3-ம் தேதி அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
English summary:
Chennai: jallikattu matches failed to central and state governments Alanganallur in Madurai district in protest against the demonstration on January 3 that the DMK treasurer MK Stalin said.