புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டு நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட போலி அபிடவிட்தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
முகாந்திரம் உள்ளது:
டில்லியை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் நீரஜ் சக்சேனா, அனுஜ் அகர்வால் ஆகியோர் டில்லி மெட்ரோபோலிடன் மாஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: 2013ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த அபிடவிட்டில், உண்மையான முகவரியை மறைத்தார். தனது சொத்தின் உண்மையான மதிப்பை வேண்டுமென்றே குறைத்து காண்பித்தார். இதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. முதல்வர் பொறுப்பில் உள்ளதால் அதிக பணி மற்றும் ஆலோசனைகளில் கலந்து கொள்ள உள்ளதால், கோர்ட்டில் நேரில் ஆஜராக, கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம், கோர்ட் விலக்கு அளித்து உத்தரவிட்டது.
ஒத்திவைப்பு:
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில், ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமினில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய கோர்ட், வழக்கு விசாரணையை, 2017 ம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
English Summary:
NEW DELHI: The Delhi assembly elections held in 2013 were fake affidavits case of bail, a court ordered the Chief Minister Kejriwal.