சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த சோதனையில், பல போலி வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனை:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதிக டிபாசிட் உள்ள வங்கியாக உள்ளது. மாவட்டம் முழுவதும், 64 கிளைகள் உள்ளன. சேலம் மாவட்ட ஜெ., பேரவை தலைவராக உள்ள இளங்கோவன், வங்கி தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். செல்லாத நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நவ., 15 வரை, பல நூறு கோடி ரூபாய் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளை கணக்குகளில், டிபாசிட் செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மாலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த கூட்டுறவு உயர் அலுவலர்கள் மூலம், அனைத்து கிளைகளிலும், டிபாசிட் செய்தவர்களின் கணக்குகளை, உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 64 வங்கி கிளை அலுவலர்களும், தங்களது கணக்கு புத்தகங்களை கொண்டு வந்து, வங்கி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றை சோதனை மற்றும் ஆய்வு செய்யும் பணியில், தொடர்ந்து வருமானவரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
டிபாசிட்:
இந்த ஆய்வில் போலி வங்கிக்கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரூ.150 கோடி வரை போலி கணக்குகள் மூலம் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். பழைய ரூபாய் நோட்டுகள் இந்த வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
English Summary:
Salem: Salem District Central Co-operative Bank in the trial, a number of bank accounts were found to be fake.