சென்னை : புயல் காரணமாக விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வர்தா புயலின் தாக்கம் காரணமாக புயல் காற்று, அதிவேகமாக வீசும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. புயலின் தீவிரத்தை உணர்த்த சென்னை துறைமுகத்தில் 10 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூரில் 8 ம் எண் புயல் எச்சரிக்கை கூடும் ஏற்றப்பட்டது. இந்நிலையில் வர்தா புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பின்னும் நேற்று வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது.
தற்போது வர்தா புயல் சின்னமானது பெங்களூரு அருகே நிலை கொண்டுள்ளது. காற்றின் வேகம் சீரடைந்துள்ளது. இதனால் புயல் காரணமாக விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், மீனவர்கள் இனி வழக்கம் போல் கடலுக்கு செல்லலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English summary:
Chennai: Storm withdrew due to warned fishermen to go to sea Chennai Meteorological Bureau said.