சென்னை - கரும்பு விவசாயிகளின் நலன்கருதி, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட டன்னுக்கு 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், கூடுதலாக 550 ரூபாய் பெற வழிவகை ஏற்படும் என்றும் முதலமைச்சர் . ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் . ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு உற்பத்தியைப் பெருக்கவும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அவர்களது வருமானம் அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடைந்து அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
நிழல்வலை கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர், உரம் ஆகியவைகளை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர்ப் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய தொழில்நுட்பங்களை கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் ஜெயலலிதா ஆணையின்படி, கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளிலும் உயர் அளவில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்துள்ளது - ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசு அதேபோன்று கரும்புக்கான மாநில பரிந்துரை விலையைநிர்ணயம் செய்ய முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரும்புக்கு விலை நிர்ணயம் :
நடப்பு கரும்பு பருவத்தில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம்செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நேற்று, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் . எம்.சி.சம்பத், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் மதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .க.சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் . விக்ரம் கபூர், வேளாண்மைத் துறைச் செயலாளர் .ககன்தீப் சிங் பேடி, சர்க்கரைத் துறை ஆணையர் . மகேசன் காசிராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது - அதாவது, கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது - அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கி வருகின்றன -அதேபோன்று மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,475 ரூபாய் வழங்கி வருகின்றன என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.550 கூடுதலாக கிடைக்கும் :
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட, 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது - இதன்மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2,300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப்பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேளாண்மைத் துறைக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குழு அமைக்க உத்தரவு :
கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் . ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English summary:
Chennai - the welfare of sugarcane farmers, the state government recommended price, including transport costs Rs 100 to Rs 2,850 per tonne for price fixing do so, as the chief means to get an additional 550 rupees. Oh. Panneerselvam announced. Moreover, the relevant recommendations to the government with regard to fixing sugarcane price to farmers, sugar mill chief minister has ordered the formation of a committee of representatives and government officials.