புதுடில்லி : கறுப்புப்பணம் குறித்த தகவல்களை தெரிவிக்க மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை தந்த இமெயிலுக்கு 4 நாட்களில் 4 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன.
4 ஆயிரம் புகார்கள் :
கறுப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி blackmoneyinfo@incometax. gov.in என்ற இமெயில் முகவரியை, மத்திய நிதியமைச்சக புலனாய்வு அமைப்பு கடந்த 16ம் தேதி(டிச.,16) அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அன்று முதல் இந்த இமெயில் முகவரிக்கு புகார்கள் குவியத் துவங்கியுள்ளன. இதுவரை 4 ஆயிரம் புகார்களுக்கும் மேல் வந்துள்ளதாக நிதியமைச்சக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல் :
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறப்பட்ட பின்பு வங்கிகளில் அதிக டெபாசிட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டால் வங்கிகள் நிதியமைச்சக புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் கணக்கில் வராத பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் சுமார் 100 கோடி வரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
NEW DELHI : Union finance ministry to report information on the Bureau's deluded email 4 thousand complaints are concentrated in 4 days.