புதுடெல்லி, பழைய ரூ 500, ரூ1000நோட்டுகள் செல்லாது என்ற அரசின் முடிவை எதிர்த்து பாராளுமன்றத்தில் எதிர் கட்சியினர் நேற்றும் பிரச்சினை ஏற்படுத்தியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த 3 வாரமாக எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கி வருகிறது. கறுப்பு பணம், கள்ள நோட்டு, வரி ஏய்ப்பு ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக பழைய ரூ 500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
எதிர்ப்பு:
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என அரசு அறிவித்த நிலையில், தங்களிடம் உள்ள பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகளில் பல நாட்கள் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் நின்றனர். இதில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அப்பாவி, நடுத்தர மக்களை மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கும் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி செய்து வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
ராஜ்ய சபாவின் முன்னாள் உறுப்பினரும் பத்திரிகையாளர், நடிகர் ,இயக்குனரான துக்ளக் சோ நேற்று மரணம் அடைந்ததற்கு ராஜ்ய சபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு அவை இரங்கல் தெரிவித்த பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டார்கள். ராஜ்ய சபையில் , காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுவதும் 834 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் நடவடிக்கையை விமர்சித்தார்.
அதிருப்தி:
ராஜ்ய சபாவிலும், லோக்சபாவிலும் எதிர் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது குறித்து பா.ஜ.,கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வேதனை அடைந்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கு அதிருப்தியும் தெரிவித்தார்.
English Summary:
New Delhi, Old Rs 500, Rs 1000 notes that the Government's decision was invalid, resulting in the issue in Parliament yesterday and which operations have been affected by the opposition party.