சென்னை - தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அப்போலோ மருத்துவமனைகள் குழு தலைவர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்ட பலர் விசாரித்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 15-ம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை, நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது தொண்டை பகுதியில் டிரக்யாஸ்டமி என்ற கருவி மூலம் செயற்கை சுவாசம் அளித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன் னும் 2 நாளில் அவர் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. நேற்று 6 வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சுதர்சன் நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண், பழ. கருப்பையா, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலர் மருத்துவ மனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும் பத்தினரிடம் விசாரித்துச் சென்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, ‘‘தமிழகத்தின் மூத்த அரசி யல் தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கி றேன். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்கள் குடும்பம் மீது தனிப் பட்ட அன்பு கொண்டவர். என் திருமணத்தை நடத்தி வைத்தவர். என்னுடைய மகன் திருமணத்திலும் பங்கேற்றார். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். மீண்டும் அவர் தீவிர அர சியலில் ஈடுபட வேண்டும். அவரது உடல் குணமடைந்துள்ளதாக தெரிவித்தனர்’’ என்றார்.
English summary:
Chennai - DMK Chairman of the State BJP President M Karunanidhi health Tamilisai Soundarajan, Apollo Hospitals Group Chairman Prathap ciretti questioned others. DMK chief Karunanidhi illness occurred on the night of the last 15 in Chennai Kaveri Alwarpet Anu, was treated in hospital. His throat and lungs, causing respiratory infection was discovered in testing involved.