
இரண்டாவது முறையாக கோப்பை:
மூன்றாவது ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான பைனல் கொச்சியில் நடந்தது. இதில் கோல்கட்டா, கேரளா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது. பின் கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களும் கூடுதலாக கோல் எதுவும் அடிக்கவில்லை.
பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய கோல்கட்டா அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 2014ல் கேரளாவை வீழ்த்திய கோல்கட்டா அணி முதன்முறையாக கோப்பை வென்றது.
English Summary:
Kochi: aiesel., Kolkata team championship in football. Final 'in the penalty shoot-out netting the only goal in the 4-3 beat Kerala.