செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாடு முழுவதும், கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவுவதால், ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் அச்சிடுவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மக்கள், வங்கிகளில் பணம் பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு அச்சகங்களில், புதிய நோட்டுகள் அச்சிடுவது புழக்கத்திற்கு வர, சில மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம், 30ம் தேதியுடன், பழைய, 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம் முடிகிறது.
ஐரோப்பிய நாடுகள் :
இந்நிலையில், பணத் தட்டுப்பாட்டை போக்க, ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் அச்சிட்டு பெறுவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், ரூபாய் நோட்டுகளை அச்சிடக் கூடிய நிறுவனங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியின், ஜிய்செக் அண்ட் டெவ்ரியன்ட், பிரான்சின், பிரான்காய்ஸ் சார்ல்ஸ் ஒபெர்துர் பிடுசியாய்ரி உள்ளிட்ட அச்சக நிறுவனங்களை, இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இந்த நிறுவனங்கள், கனடா, பிரிட்டன், மலேஷியா, இந்தோனேஷியா, வெனிசுலா உள்ளிட்ட பல நாடுகளின் கரன்சிகளை அச்சிட்டு தருகின்றன.
ஆலோசனை :
சமீபத்தில் டில்லியில் நடந்த மத்திய அமைச்சகங்களின் செயலர்கள் இடையிலான கூட்டத்தில், தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் ரூபாய் நோட்டுகளை, வெளிநாடுகளில் உள்ள அச்சகங்களில் அச்சிட்டு பெற வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டது.
இதற்கு முன் :
இந்தியாவின் கரன்சி நோட்டுகள், இதற்கு முன்பும், வெளிநாடுகளில் உள்ள அச்சகங்களில் அச்சிட்டு பெறப்பட்டுள்ளன. கடந்த, 1997 - 98ல், ஜெர்மன், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளை சேர்ந்த, அச்சக நிறுவனங்களிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு பெறப்பட்டன.
அரசுக்கு சொந்தமான நான்கு அச்சகங்களில், தொடர்ச்சியாக ரூபாய் நோட்டுகள் அச்சிட்டாலும், பணத் தட்டுப்பாடு மேலும் சில காலம் தொடரும்; இயல்பு நிலை திரும்ப, ஐந்து மாதங்கள் ஆகும்.
-பி.கே.பிஸ்வாஸ், பொதுச்செயலர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.
English summary:
Invalid currency note after the announcement, all over the country, there is a severe shortage of money, about how to print banknotes in foreign countries, the Federal Government is actively considering.