மும்பை: தொலை தொடர்பு நிறுவனமான, ரிலையன்ஸ் ஜியோ, தற்போது வழங்கி வரும் அதன் இலவச சேவைகள் அனைத்தையும், 2017 மார்ச், 31 வரை நீட்டிக்க இருப்பதாக, அதன் தலைவர், முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற, செய்தியாளர்களுடனான சந்திப்பில், இதை அவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ, தன்னுடைய சேவையை, கடந்த செப்., 1ல், அறிமுகம் செய்தது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு, டிச., 31 வரை, அனைத்து வகையான வாய்ஸ் கால்கள், இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் இலவசம் எனவும் அறிவித்தது.
இதையடுத்து, 83 நாட்களில், 5 கோடி வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் பெற்று சாதனை படைத்தது. பல முன்னணி நிறுவனங்கள், 10 ஆண்டுகளில் எட்டாத உயரத்தை, 83 நாட்களிலேயே, ஜியோ எட்டியது. இதன் தொடர்ச்சியாக, 2017 மார்ச்சில், 10 கோடி வாடிக்கையாளர்களை எட்டப் போவதாக அறிவித்தது.
இந்நிலையில், டிச., 4 முதல், ஒவ்வொரு புதிய வாடிக்கையாளரும், புத்தாண்டு சலுகையாக, மார்ச், 31 வரை, சேவைகளை இலவசமாக பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், இந்த சலுகை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி, அம்பானி கூறுகையில், ''ஜியோ, முதல் மூன்று மாதங்களில், 'பேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ் ஆப்' ஆகிய வற்றை விட, வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. மூன்று மாதங்களில், 5.2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. வேகமாக வளரும் தொழில்நுட்ப நிறுவனமாக, ஜியோ மாறியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே இருக்கும் மற்ற நிறுவனங்களிடமிருந்து, தேவையான ஆதரவை நாங்கள் பெறவில்லை.
கடந்த மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட, 900 கோடி வாய்ஸ் கால்கள், மூன்று நிறுவனங்களால் தடுக்கப்பட்டன,'' என, தெரிவித்துள்ளார்.
சிறப்பு சலுகைகள்:
● டிச., 4 முதல், புதிய வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் வரை சலுகை
● ஜியோவின் புத்தாண்டு சலுகையாக, ஒவ்வொரு நாளும், 1 ஜிபி டேட்டா இலவசம்
● அனைத்து உள்நாட்டு வாய்ஸ் கால்களும் இலவசம்
● ஜன., 1 முதல், ஏற்கனவே இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இந்த சலுகைகள் வழங்கப்படும்.
English Summary : Free until March: Geo's New Year gift.The telecommunications company, Reliance Geo, who is currently a free service, so all of March 2017, to be extended up to 31, and its chairman, Mukesh Ambani said. In Mumbai, in a meeting with reporters, he said.