புதுடெல்லி, சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைத்தது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை (சி.பி.ஐ.) முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், தி.மு.கவை சேர்ந்தவருமான தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் இதர 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
சட்டவிரோத இணைப்பகம்:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில், தி.மு.கவைச்சேர்ந்த தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவியில் இருந்த போது அவரது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டி.வி உபயோகத்திற்காக சட்டவிரோதமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தை சென்னையில் போட் கிளப் அவென்யூவில் உள்ள தனது இல்லத்தில் அமைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இல்லத்தில் அமைக்கப்பட்ட இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் சன் டி.வி. பயன்பாடுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல்:
இந்த இணைப்பகம் அமைப்பது தொடர்பாக முறையாக தெரிவிக்கப்படவில்லை. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தால் அரசுக்கு ரூ1.78கோடி இழப்பு ஏற்பட்டது . இது தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் இதர 3 பேர் மீது நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் அந்த விசாரணை அமைப்பு நேற்று அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இதர நபர்கள் முன்னாள் தெலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் அப்போதைய தனிச்செயலாளர் மற்றும் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர்கள் (தற்போது ஓய்வு) இருவரும் அடங்குவர்.
சி.பி.ஐ குற்றச்சாட்டு:
இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம் பேரில் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2006ம் ஆண்டு வரை 364 தொலைபேசி நம்பர்கள், இணைப்புகள் சென்னை கோபால புரத்தில் உள்ள மாறனின் இல்லத்தில் அமைக்கப்பட்டது. மேலும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 353 தொலைபேசி இணைப்புகள் சென்னை அவென்யூ போட் கிளப் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த தொலைபேசி இணைப்புகள் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் புதிய இல்லத்தில் அமைக்கப்பட்டது ஆகும். இதனைத்தவிர் மேலும் 10 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்புகள் முந்தய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் வாய் மொழி உத்தரவின் பேரில் தரப்பட்டது. இதில் 9 நம்பர்கள் கலாநிதி மாறனின் சன் டி.விக்காக தரப்பட்டது என சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் மீது சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதால் அரசுக்கு ரூ1.78கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல்:
இந்த தொலைபேசி இணைப்புகளுக்கு எந்தவித பில்களும் தரப்படவில்லை. இதில் இருந்து அதிக அளவில் புள்ளி விவரங்கள், குரல், வீடியோ, மற்றும் ஆடியோ தகவல்கள் பெறப்பட்டன. சன் டி.வியின் உபயோகத்திற்காகவே இந்த இணைப்புகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டன என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.சட்ட விரோத தொலைபேசி இணைப்புகளுக்கு எந்த வித நிர்மாண கட்டணமோ, வாடகைக்கட்டணமோ பெறப்படவில்லை அகண்ட வரிசை வசதிகள் உள்ள இந்த தொலைபேசி இணைப்புகள் கண்ணாடி இழை வயர் மூலம் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட்ட இரு இல்லங்களையும் இணைப்பதாக இருந்தது என்றும் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில், தயாநிதி மாறன், சன் டி.வி. கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
English Summary:
New Delhi, illegally erected a telephone exchange, the Central Intelligence Agency (CBI) Former Telecom Minister Dayanidhi Maran senator from DMK, Maran and his brother Dr. chargesheet filed against 3 persons. In the charge sheet, CBI special court in New Delhi Filed.