லக்னோ : 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வரவிருக்கும் உ.பி., சட்ட சபைத் தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என உ.பி., முதல்வர் அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
வெற்றி உறுதி:
லக்னோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், உ.பி., மக்கள், மத்திய அரசு மீது கடும் எரிச்சலில் உள்ளனர். இந்த விவகாரம் தான், அடுத்தாண்டு துவக்கத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், முக்கிய பிரச்னையாக உருவெடுக்கப் போகிறது. இதனால், உ.பி.,யில், மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம்; அதில் எந்த சந்தேகமும் இல்லை.
காங்., உடன் கூட்டணி?
எங்கள் குடும்பச் சண்டை முடிந்து போனது. சட்டசபைத் தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கிறோம். மாநிலத்தில் ஜாதி அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். தேர்தலில் காங்., கட்சியுடன் சமாஜ்வாதி கைகோர்த்தால் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இப்போதே கூட்டணி குறித்து கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Lucknow: 500, 1000, originated from the withdrawal of banknotes the damages caused by the forthcoming UP elections law back in SP As the party to victory, UP Chief Minister Akhilesh hoped.