புதுடில்லி : பிரதமர் மோடிக்கு எதிராக கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை போலீசிலோ அல்லது கோர்ட்டிலோ ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதற்காக ராகுல் சிறைக்கு சென்று, 3 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.
ராகுல் குற்றச்சாட்டு :
ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்குண்டு. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என நேற்று முன்தினம் (டிசம்பர் 14) காங்., துணைத் தலைவர் ராகுல் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார். ஆதாரமற்ற பொய்யான இந்த குற்றச்சாட்டை பிரதமர் மீது கூறியதற்காக ராகுல், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.,வும், உண்மையில் ராகுலிடம் பிரதமருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் அதனை அவர் வெளியிடலாமே என ஆம்ஆத்மியும் கருத்து தெரிவித்தன.
ஆதாரங்களை கொடு :
இந்நிலையில் ராகுலின் குற்றச்சாட்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி, " பிரதமருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டிற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறும் ராகுல், சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அந்த ஆதாரங்களை போலீசிலோ அல்லது கோர்ட்டிலோ ஒப்படைக்க வேண்டும். அப்படி அவர் ஆதாரங்களை ஒப்படைக்கா விட்டால் ராகுலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
வெளியே தூக்கி வீசியிருக்கனும் :
நவம்பர் 16ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல் ரூபாய் நோட்டு விவகாரத்தை கையில் எடுத்து பார்லி., இருஅவைகளும் முடக்கப்பட்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியசாமி, "அரசு மிகவும் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. கூட்டத்தொடர் துவங்கிய நாளிலோ அல்லது 2 நாட்களிலோ, அவைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை அவை காவலர்களை அழைத்து வெளியே தூக்கி வீசி இருக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
English Summary:
New Delhi: Prime Minister Narendra Modi said that the evidence of corruption or whether in police r court have to hand. Otherwise, the Prime Minister over the alleged case produced Rahul goes to jail, sentenced to 3 years in order to enjoy the BJP MP, warned subramaniya swamy