காந்திநகர்: டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது குறித்து மக்களுக்கு பா.ஜ.,வினர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சொல்லித்தர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
முதல்முறை:
குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றார். தீசா நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் பேசினார். தொடர்ந்து காந்தி நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு சென்றார். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் குஜராத் மாநில பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
எளிதானது:
அங்கு பா.ஜ.,வினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்ந்து, மக்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். மொபைல் மற்றும் டிஜிட்டல் வங்கி நடைமுறை தொடர்பாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு சொல்லித்தர வேண்டும். வாடஸ் அப் பயன்படுத்துவது போல, ரொக்கமில்லா பரிமாற்றம் தொடர்பாகவும் எளிதாக கற்றுக்கொள்வார்கள் எனக்கூறினார்.
தாயாரிடம் ஆசி:
தீசாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னர் பிரதமர் மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது சகோதரர் வீட்டில் இருந்த தனது தாயாருடன் பிரதமர் மோடி, சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். முன்னதாக, கடந்த செப்., 17 ம் தேதி, தனது 66வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் தாயாரை சந்தித்து பேசியிருந்தார்.
English summary:
Gandhinagar: BJP to people about how to transfer the digital mode, staggering and MLAs have taught him that the Prime Minister said.