பனாஜி - கோவா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக கடந்த மாதம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வராததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரூ.1.50 கோடி பறிமுதல் :
இதனிடையே, பழைய ரூபாய் நோட்டுகளை முறைகேடாக மாற்ற முயற்சி செய்வோர் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவா மாநிலம் போன்டா மற்றும் போர்ஓரிம் ஆகிய நகரங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, அங்கு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English summary:
Goa raid conducted by the police in various parts of the state, worth Rs one crore 50 lakh 2 thousand new banknotes were seized. Police arrested two men carried out a serious investigation in this regard.