புதுடில்லி : விவசாயிகள் தங்களின் பயிர்க்கடனை திரும்ப செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அவகாசம் :
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் ஆசிஷ்குமார் புடானி கூறுகையில், ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரையிலான காலத்தில் விவசாயிகளின் கடனை திரும்ப செலுத்தும் நாள் வந்தால் அவர்களுக்கு கூடுதலாக 60 நாட்கள் வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தினால் அவர்களுக்கு 3 சதவீத மானியமும் கிடைக்கும்.
உதாரணத்துக்கு ஒரு விவசாயியின் பயிர்க்கடன் நவம்பர் 15-ந் தேதி திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்றால், அந்த விவசாயிக்கு அந்த தேதியில் இருந்து கூடுதலாக 60 நாட்கள் (ஜனவரி 15-ந் தேதி வரை) வழங்கப்படும். அதற்குள் அவர் கடனை திரும்ப செலுத்திவிட்டால் 3 சதவீத வட்டி மானியமும் கிடைக் கும் என தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: The farmers pay back their grains Federal Government has ordered a 60-day extension.