புதுடில்லி: பண மோசடி தொடர்பான வழக்கில், பி.ஆர்.பி., நிறுவனத்தினரின் ரூ.528 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
முடக்கம்:
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த கிரானைட் மோசடி தொடர்பாக பி.ஆர்.பி., நிறுவனத்தினர் மீது கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதே வழக்கில் பண மோசடி செய்ததாக, பி.ஆர்.பி., நிறுவனத்தினர் மீது போலீசார் தொடர்ந்த வழக்கு அடிப்படையில், கிரிமினல் வழக்கு ஒன்றை அமலாக்கத்துறையினர் தொடர்ந்தனர். இந்த வழக்கில், 1,625 அசையா சொத்துக்கள் மற்றும் பிக்சட் பெபாசிட்களை, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
சட்ட விரோதம்:
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வெளியிட்ட அறிக்கை: விசாரணையின் போது, கடந்த 2006 - 13ம் வருடத்தில், பி.ஆர்.பி., நிறுவனத்தினர், சட்டவிரோதமாக 1,625 அசையா சொத்துக்களை வாங்கியுள்ளனர். மொத்தம் ரூ.103 கோடிக்கு இந்த சொத்துகளை வாங்கியுள்ளதாக பதிவுத்துறை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் இன்றைய சந்தை விலை ரூ.528 கோடியாகும். ரூ.32,57,275 லட்சம் பிக்சட் டிபாசிட் செய்துள்ளனர். சொத்துக்கள் அனைத்தும் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிஆர்பி கிரானைட்ஸ் பெயரில் வாங்கியுள்ளனர். இவை அனைத்தும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்:
இரண்டு நிறுவனங்களும் அதன் நட்பு தொழில் நுட்பங்களும் சேர்ந்து, உரிமை பெறாத நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை எடுத்து கிரிமினல் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அவர்கள் போலியான மற்றும் அவர்களே உருவாக்கிய ஆவணங்கள், லைசென்ஸ்களை தயாரித்து,உரிமை பெறாத நிலங்களுக்கு உரிமை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறையினர் புறம்போக்கு நிலங்களில் வைத்திருந்த எல்லை கற்களை இவர்கள் அகற்றியுள்ளனர். மனித உயர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில், வெடிகுண்டுகள் வைப்பது தொடர்பான பாதுகாப்பு விதிகளையும் அவர்கள் மீறியுள்ளனர். சட்ட விரோதமாக ஆவணங்கள் மூலம் கிரானைட் கற்களை விற்ற, சட்ட விரோதமாக பணம் தயாரித்து அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
English Summary:
NEW DELHI: In the case of money laundering, PRP, the company's assets worth Rs .528 crore disabled.