மேலூர்: கிரானைட் வழக்கில் 4 வழக்குகளில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.84 கோடியே16 லட்சத்து 4 ஆயிரம், நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு கிரானைட் எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பி.ஆர்.பி., உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 56க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி., உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார், 3,180 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.84 கோடியே16 லட்சத்து 4 ஆயிரம், இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Melur: granite lawsuit was filed today in 4 cases. Of this, Rs .84 crore 16 lakh 4 thousand, losses were being set