மேலூர்: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் 4 நிறுவனங்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன்படி, கிரானைட் முறைகேட்டால், அரசுக்கு 1365.96 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை:
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தவிர, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக பல வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பி.ஆர்.பி., நிறுவனத்தினரின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.
நஷ்டம்:
இந்நிலையில், இன்று பி.ஆர்.பி., உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது போலீசார் மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3,633 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், அரசுக்கு 1,365 கோடியே, 96 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Melur: granite abuse, police filed a chargesheet in the case on 4 companies. Accordingly, granite abuse, the government said the loss of 1365.96 million.