சென்னை: மதுரையில் நடந்த கிரானைட் மோசடி தொடர்பாக, பணமோசடி வழக்கில் ரூ.44 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
விதிகளை மீறி...:
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தி: ஐஸ்வர்யா நிறுவனத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, இரண்டு பேர் மீது பணமோசடி செய்ததாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையின் போது சங்கரநாராயணன், பிகேஎம் செல்வம் என்பவர்கள், எம்எஸ் கிரானைட்ஸ், ஸ்ரீ ஐஸ்வர்யா எக்ஸ்போர்ட்ஸ் என்ற இரண்டு நிறுவனத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் உரிய அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக கிரானைட் கற்களை எடுத்து குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினர் அமைத்திருந்த எல்லை கற்களை அகற்றிவிட்டு, அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக எடுத்துள்ளனர். அப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் வெடிபொருட்களும், இயந்திரங்களும் வைக்கப்பட்டது தெரியவந்தது.
குற்றச்செயல்:
சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருமானம் பெற்றுள்ளனர். விற்பனை நடைமுறை மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட உள்ளூரிலும் வெளியூரிலும் கிரானைட் கற்களை விற்றுள்ளனர். கிரானைட் தொழில் மூலம் கிடைத்த பணத்தை அசையா சொத்துகள், பொருட்கள் மற்றும் சிலவற்றில் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சொத்துகளை தங்களது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியுள்ளனர். பிக்சட் டிபாசிட்டும் செய்துள்ளனர். 31 அசையா சொத்துக்களில் அவர்கள் ரூ.43 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். 37 பிக்சட் டிபாசிட்கள் மூலம் அவர்கள் ரூ.1.52 கோடி டிபாசிட் செய்துள்ளனர். இவை அனைத்தும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai and Madurai in the granite fraud, money laundering case, the Enforcement to freeze the assets of Rs .44 crore.