வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்று ஒபாமா எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட அக்கட்சியை சேர்ந்த அதிகாரிகளின் இ-மெயில்கள் ஹேக்கிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பின்னணியில் ரஷ்யா அதிபர் புதின் உள்ளார் என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அமெரிக்காவின் என்பிசி செய்தி நிறுவனம் கூறியிருந்தது.. வாஷிங்டன் போஸ்ட்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ர்ம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா அதிபர் புதின் மறைமுகமாக உதவினார் என்று கூறியிருந்தது.
காத்திருக்கிறேன்:
இந்த நிலையில் இது குறித்து அமெரிக்க தேசிய வானொலியில் ஒபாமா பேசியதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று தலையிட்டதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. நான் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறேன். ரஷ்ய அதிபர் புதினுக்கு நான் என்ன கூறுகிறேன் என்பது நன்கு விளங்கும். ஏனெனில் இது தொடர்பாக நான் புதினுடன் ஏற்கெனவே நேரடியாகவே பேசி இருக்கிறேன். அமெரிக்க உளவியல் அதிகாரிகள் ஹேக்கிங் தொடர்பான முழு அறிக்கையை எனது அதிபர் பதவி முடிவதற்குள் அளித்து விடுங்கள். இதற்கான பதிலடியை ரஷ்யா எதிர்கொண்டே ஆக வேண்டும்" என்று கூறினார்.
English summary:
Washington - US presidential election, Obama warned that hacking will be tight fitting in the case of Russia. In the US presidential election, Democratic Party presidential candidate Hillary Clinton, e-mails, including officials of the party has been accused of hacking to be.