பெங்களூரு : பெங்களூருவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசுகையில், பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், நோயாளிகளை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரமான நேரங்களில் இது பாதிப்பை உண்டாக்குகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்காக 3 ஹெலிகாப்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களில் ஐ.சி.யு. வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் இதற்கு என்றே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒலியும் மற்ற ஹெலிகாப்டர்களை விட குறைவாக இருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறினர்.
English Summary:
Bangalore: Bangalore: Karnataka Chief Minister Siddaramaiah launched helicopter ambulance service.