மும்பை : கிரிக்கெட் மைதானத்தில் ஹெலிபேட் அமைப்பது தொடர்பாக, மும்பையை சேர்ந்த சாதனை மாணவன், போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதனை :
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவின் மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ் தன்வாடே. கிரிக்கெட் வீரரான தன்வாடே, இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், ஆட்டமிழக்காமல், 1,009 ரன்கள் குவித்து, கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த சாதனையை படைத்தார்.
வாக்குவாதம் :
கல்யாண் பகுதியில், தன் நண்பர்களுடன், பிரணவ் தன்வாடே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்; அப்போது, அங்கு வந்த போலீசார், 'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வருவதால், 'ஹெலிபேட்' அமைக்கப்பட உள்ளது; உடனே வெளியேறுங்கள்' என, கூறியுள்ளனர்.
எச்சரிக்கை:
இது தொடர்பாக போலீசாருடன், பிரணவ் மற்றும் அவரது நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லப்பட்டனர். மூத்த போலீஸ் அதிகாரி, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
சாலை வழியாக..
இது குறித்து கேள்விபட்ட, மத்திய அமைச்சர் ஜாவடேகர், தனக்காக ஹெலிபேட் அமைக்க மைதானத்தை பயன்படுத்த வேண்டாமென கூறி, நாக்பூரில் இருந்து, சாலை வழியாக மும்பைக்கு சென்றார்.
English Summary:
Mumbai : Cricket Grounds helipad formation, the Mumbai-based student achievement, and working with the police caused a stir argument.