சென்னை: உடல் நலக்குறைவால் நேற்று காலமான ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பல கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நேரில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, முதல்வர் பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார். ஸ்டாலினுடன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, வேலு மற்றும் சென்னை முன்னாள் மேயர் சுப்ரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
வேதனை:
பின்னர் ஸ்டாலின் பத்திரிகையாளரிடம் கூறுகையில், ஜெயலலிதா மறைவு ஆழ்ந்த வேதனையும், அதிர்ச்சியையும் தருகிறது. ஜெயலலிதா மறைவால், துயரத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஜெயலலிதா எந்த பொறுப்பை ஏற்றாலும், சத்துணவு திட்ட கண்காணிப்பு பணி, ராஜ்யசபா எம்.பி., அதிமுக பொதுச்செயலாளர், முதல்வர் எந்த பதவியிலும் பணியாற்றினாலும், தனி முத்திரை பதித்துள்ளது, பாராட்டுக்குரியது. சிறப்புக்குரியது. எந்த பிரச்னையிலும், விடாப்பிடியாகஇருந்து தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் பாராட்டு பெற்றுள்ளார். அவரை இழந்து வாடும், தமிழக மக்கள், கட்சியினர் வேதனையில் இருப்பார்கள். இதில் திமுகவும், கருணாநிதியும் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஜெயலலிதா மறைவுக்கு மீண்டும் வேதனையை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
English Summary:
Rajaji Hall is housed in the body of illness, she died yesterday. Many party leaders have been paying tribute in person.Opposition leader MK Stalin in person to pay homage to her body, asked Chief panneerselvam welfare. With Stalin, former ministers Nehru, Periyasamy, Velu and Chennai also paid tributes to former Mayor Subramaniam.