சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்; போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
சசிகலாவை பொதுச் செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்த நிலையில், தீபாவின் அடுத்தகட்ட மூவ்களுக்காக, அவரை பிரதமர் மோடியை சந்திக்க வைக்க தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்கள் சிலர், முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, தீபா, எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திக்கக்கூடும் என, செய்திகள் பரவின. அதற்கேற்றார் போல, தீபாவும், நான் மோடியை சந்திக்க விரும்புகிறேன். அழைப்பு வந்தால், எந்த நேரமும் சந்திப்பேன் என கூறி வந்தார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை, தமிழகத்தில் உள்ள பாமரனும் அறிந்து வைத்திருக்கிறான். இந்த மர்மங்கள் பற்றி, தினந்தோறும் நிறைய நிறைய செய்திகள் சமூக வலைதளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து, உரியவர்கள் கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், மக்களும்; கட்சியினரும் அவர்களை புறக்கணிப்பர்.
இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு தரப்பிலும், இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவது போல வெளியே தெரிந்தால், மக்கள் மத்தியில் பா.ஜ., அரசு மீது கோபம் ஏற்படலாம். அதனால், தமிழகத்தில் சசிகலாவுக்கு எதிராக இருக்கும் சிலரை இப்போதைக்கு சந்திப்பதைத் தவிர்க்கலாம் என, ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, தமிழகத்தில் இருந்து சிலர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி, அப்பாயின்மெண்ட் கேட்டதும், இப்போதைக்கு இல்லை என தெரிவித்து விட்டனர்.
அந்த வகையில்தான், சில காலம் பொறுக்குமாறு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, நியாயம் கேட்கவும்; ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து பேசுமாறும் தீபாவுக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன.
இருந்த போதும், மோடி, எந்த நேரத்திலும் தனது முடிவை மாற்றி, தீபாவை சந்திக்கலாம். அதற்கான சூழ்நிலைகளும் உள்ளன. அதன்படி பார்க்கும்போது, வருமான வரித் துறையின் அதிரடி சோதனைகள், தமிழகம் முழுவதும் இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடக்கும் என்றே தெரிகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister Jayalalithaa's death remain a mystery; Sasikala and her family had to flee from the Poes Garden is raised voice, she's niece Deepa.