சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு :
சமீபத்தில் சென்னையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.132 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், சி.பி.ஐ., அமைப்பு விசாரணையில் இறங்கியது.
இதனையடுத்து சேகர் ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் சேகர் ரெட்டியுடன், ராம் மோகன் ராவிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இன்று காலை 5.15 மணி முதல், ராம் மோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராம் மோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
உறவினர் வீடுகளிலும் ரெய்டு :
ராம் மோகன் ராவ் உறவினர் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ராம் மோகன் ராவிற்கு நெருக்கமான 7 தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. ஆந்திராவின் சித்தூரில் உள்ள ராம் மோகன் ராவின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Secretary Ram Mohan Roy's house, income tax authorities have been conducting a raid.