காலாப்பட்டு:
நாடா புயல் காரணமாக உருவான கடல் சீற்றத்தால் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 5 வீடுகள் மற்றும் படகுகள் சேதமடைந்தன. இதையடுத்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுவை அருகேயுள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. 2004 சுனாமிக்கு பிறகு அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் வீடுகள், மரங்கள், படகுகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடா புயல் காரணமாக புதுவையில் நேற்று முன்தினம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதில் பொம்மையார்பாளையம் கடற்கரையோரம் உள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள 6 வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல் 2 படகுகள் ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. மேலும் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சாலையும் சேதமடைந்தன. அரசு தூண்டில் வளைவு அமைக்காததால் தான் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது என விரக்தியடைந்த 50 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இசிஆரில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வானூர் தாசில்தார் கமர்சிங் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிரந்தர தீர்வு ஏற்படும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று மறுத்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிமேகலை வந்து விரைந்து நடவடிக்ைக எடுப்பதாக கூறியதால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
40 படகுகள் சேதம்: நாகை மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக துறைமுகப்பகுதியில் உள்ள கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இலங்கை படகுகள் ஆற்றில் மூழ்கின. இந்த படகுகள் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தவை. மேலும், சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடல் சீற்றத்தால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன. இதில், 40 பைபர் படகுகள், அதில் இருந்த மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.
English summary:
Kalappattu: Tape storm occurred as a result of the anger of the sea, off the Tamil Nadu region of pommaiyarpalaiyam 5 houses in the village and the fishing boats were damaged.