காசியாபாத்: தனது வங்கிக்கணக்கில் யாரோ ரூ.100 கோடி டிபாசிட் செய்துள்ளது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பதில் இல்லை:
உ.பி., மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஜிலேதர் சிங், இவரது மனைவி சீதல் யாதவ். இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பிரதமர் அறிவித்த ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்துள்ளார்.
ஜிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகார்: கடந்த 18 ம் தேதி, தனது வீட்டருகேயுள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மிற்கு, சீதல் பணம் எடுக்க சென்ற போது, தனது வங்கிக்கணக்கில், ரூ.99,99,99,394 இருப்பதாக காட்டியது. இதனை நம்ப முடியாமல், பின்னால் இருந்தவர்களை அழைத்துக் காட்டிய போது, இவ்வளவு பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இதனை நம்பாமல், அருகில் உள்ள வேறு சில ஏடிஎம்களுக்கு சென்று பார்த்த போதும் இந்த பணம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்ற போது, இரண்டு நாளாக பதில் கிடைக்கவில்லை. ஊழியர் ஒருவர் மறு நாள் வரக்கூறினார். வங்கியின் உதவி மேலாளர் தேவையான தகவலை தருவார் என்றார். மறுநாள் சென்ற போது, உரிய காரணம் சொல்லாமல் அலைக்கழிக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி:
தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஜில்தேர் சிங் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார். மனைவி வங்கிக்கணக்கில் இவ்வளவு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். வங்கி அதிகாரிகளின் அலைக்கழிப்பால் மன உளச்சலுக்கு ஆளான ஜில்தேர் சிங், அருகில் வசிக்கும் படித்த நபர் ஒருவரின் உதவியோடு பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். எங்களது பிரச்னைக்கு தீர்வு கேட்டு பிரதமர் அலுவகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். பணம் டிபாசிட் செய்ய கட்டுப்பாடு உள்ள நிலையில் ரூ.100 கோடி டிபாசிட் செய்யப்பட்டது எப்படி எனக்கூறிய அவர், தனது வங்கி பாஸ்புக், ஏடிஎம் சிலிப்களை வெளியிட்டார்.
English summary:
Ghaziabad: depositing Rs 100 crore in his bank account and someone has to take action about the woman wrote a letter to the Prime Minister's office.