புதுடில்லி: ‛‛நாட்டு நலனுக்காக தேவைப்பட்டால் கடின முடிவு எடுக்க தயங்க மாட்டேன்,'' என, பிரதமர் மோடி பேசினார்.
சாதனை:
மும்பையின், ரெய்காட்டில், பங்கு சந்தைக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. ஆனால், இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது. உலகில் அதிக வளர்ச்சி பெறும் நாடு என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் பொருளாதாரத்தை அரசு மேம்படுத்தியுள்ளது. பணப்பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவாக உள்ளது. நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா விரைவில் அமலாக உள்ளது. அன்னிய முதலீட்டில் சாதனை செய்துள்ளது.
கனவு:
அரசு துடிப்பான பொருளாதார கொள்கைகளை எடுக்கும். குறுகிய கால அரசியல் லாபத்திற்காக எந்த முடிவும் எடுக்க மாட்டோம். நாட்டு நலனுக்காக, தேவைப்பட்டால் கடினமாக முடிவை எடுக்க தயங்க மாட்டேன். ரூபாய் நோட்டு வாபஸ் குறுகிய கால வலியை ஏற்படுத்தும். ஆனால், நாட்டின் நீண்ட காலத்திற்கு பலன் அளிக்கும். பங்கு சந்தை களுக்காக இந்த முடிவு எடுக்கவில்லை. கிராமங்கள் பலன்பெற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிதி சந்தையில் லாபம் பெறுவோர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அதற்கான வரியை செலுத்தியாக வேண்டும். தொழில் துவங்கவும் வணிக சந்தைக்கும் புதிய வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், உற்பத்தி துறை மேம்படும். கிராமங்கள் வளர்ச்சி ஏற்பட்டால் தான், நாடு உண்மையான வளர்ச்சி ஏற்பட்டதாக அடைய முடியும். ஒரே தலைமுறையில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எனது கனவு.இவ்வாறு அவர் பேசினார்.
English Summary:
NEW DELHI: '' I will not hesitate to take hard decisions if necessary for the welfare of the country, '' the Prime Minister said.