சென்னை : சென்னை பல்லாவரத்தில் ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியும் சிக்கினார் :
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிகாலை முதல் நடந்த வருமான வரித்துறை சோதனை, இன்று அதிகாலை நிறைவடைந்தது. 24 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏறக்குறைய 40 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று, சென்னை பல்லாவரத்தில் ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தலைமை செயலாளரை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கணக்கில் வராத பணம் :
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனராக இருப்பவர் நாகராஜன். இவரது பல்லாவரம் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.5 கோடி பணம் மற்றும் 6 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேகர் ரெட்டி விவகாரத்திற்கும், நாகராஜன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary:
Chennai Pallavaram IAS officer of the Income Tax department raided the house of a man named Nagarajan said. He kept the money which was found disproportionate.