சென்னை : டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
இந்தியா தொடரை வென்றது:
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பெரிதும் உறுதுணையாக இருந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா 26 விக்கெட்டுகளையும், அஸ்வின் 28 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
1974-ம் ஆண்டுக்கு பிறகு...
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இந்திய அணியின் இரண்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது மிகவும் அரிதாக நடைபெறுவதாகும். 1974 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதல் இரு இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்து இருப்பது இதுதான் முதல் தடவை. கடந்த 1974 ஆம் ஆண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி மற்றும் லெக்ஸ்பின்னர் பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இடங்களை முறையே பெற்று இருந்தனர்.
முதல் 2 இடத்தில் அஸ்வின், ஜடேஜா:
887 புள்ளிகளுடன் அஸ்வின் முதல் இடத்திலும், 867 புள்ளிகளுடன் ஜடேஜா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 3-வது இடத்தில் இலங்கை அணியின் ஹெராத் உள்ளார். அஸ்வின் ஏற்கனவே முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் இந்த தொடரில் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தரவரிசையில் பல இடங்கள் முன்னேறி உள்ளார். குறிப்பாக கடைசி டெஸ்டில் அவர் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்சில் அவர் வீழ்த்திய 7 விக்கெட்டுகள் தான் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
English Summary:
Chennai: Indian team in the rankings for Test matches bowler spinners Ashwin, Jadeja occupy the first two places.