புதுடில்லி : இந்தியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதலுக்கு திட்டம் :
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பாக்., பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு கட்டளைப் பிறப்பிப்பவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை உளவுத்துறை அதிகாரிகள் சில மாதங்களாக இடைமறித்து கேட்டு வருகின்றனர். இதில், இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது.
தயார் நிலையில்..
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த தலிபான் மற்றும் ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள ‛ஸ்வாட்' பள்ளத்தாக்கில் ஐ.எஸ்.ஐ., அமைப்பினர் பயிற்சியளித்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. இப்பயிற்சியை நிறைவு செய்த பயங்கரவாதிகள், இந்தியாவில் நுழைவதற்கு தயாராக, பாக்., எல்லையில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary:
NEW DELHI: India's various places to attack, Bach., Spy agency, the ISI, the intelligence agencies warned of a conspiracy was being hatched.